November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உரிய திட்டமிடல் இல்லாத, குறுகிய காலச் சிந்தனை கொண்ட தீர்மானங்கள் தான் இந்த நிலைக்கு காரணம் என்கிறார் டக்ளஸ்

நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்கின்ற தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும், அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்ட சம்பவம் வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட காரணத்தினாலேயே குறித்த நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள கருத்தை சுட்டிக் காட்டியே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவுத் தூபி ஒன்று அவசியம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் போது யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான நினைவுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்று தனிநபர் பிரேரணை கொண்டு வந்தாகவும், தமிழ் பிரதிநிதிகளின் போதிய ஒத்துளைப்பு இன்மை காரணமாகவே அதனை தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் போனதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்யிருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் அமைச்சரவையில் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்க இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.