July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாகனங்களுக்கு ‘Park and Drive’ திட்டம்!

கொழும்பு நகருக்குள் வீதிகளில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘Park and Drive’ திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார்.

மஹரகம மற்றும் மாகும்புர ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக முதலில் இந்த திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு அமைவாக கார் உள்ளிட்ட தமது சொந்த வாகனங்களில் கொழும்பு நகருக்குள் அலுவலக பணிகளுக்கு வருவோர், குறிப்பிட்ட இடங்களிலுள்ள பஸ் மற்றும் ரயில் நிலைய பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு அங்கிருந்து பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி அலுவலகம் வரக்கூடிய வகையில் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இதன்படி அடுத்த வாரம் முதல் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கொழும்பு நகரில் பிரதான வீதிகளில் கடந்த திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டம் நாளை முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்போது சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.