இலங்கையில் மாடுகளுக்கு பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு இரண்டு வகையான தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், தென்னாப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மாடுகளுக்கு பரவும் ‘கெஃப்ரி பொன்ஸ்’ என்ற வைரஸ் வகையொன்றே இலங்கையிலும் பரவி வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதுவரை வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிகளவிலான பறவைகள், மாடுகள் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, விலங்குகளிலிருந்து ஒருபோதும் இந்த வைரஸ் மனிதர்களுக்குத் தொற்றாது எனவும் கால்நடைகளை தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் கால்நடை வளங்கள் மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சரத் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.