யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுத்து வந்த போரட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானத்துள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் அச்ச நிலைமை காரணமாக மாணவர்களை அணி திரட்டி முன்னெடுத்து வந்த போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சில மாணவர்கள் சமூக இடைவெளியை பேணி, உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போராட்டம் இடம்பெற்ற இடத்தில் இருந்து செல்லாது தொடர்ந்தும் அந்த இடத்தில் இருக்கும் நபர்களை பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும், அதற்காக அவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து நேற்று இரவு முதல் பல்கலைக்கழக மாணவர்கள்கள், பழைய மாணவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.