யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் யாழ். நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் நேற்று இரவு இடிக்கப்பட்டபோது, அங்கு கலகம் விளைவித்ததாகக் கூறி மேற்படி மாணவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
மாணவர்கள் இருவரும் இன்று யாழ். நீதவான் ஏ.எஸ். பீற்றர் போல் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, மாணவர்கள் இருவரையும் ரூபா. 50 ஆயிரம் பெறுமதியான தலா ஒரு சரீரப் பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் ஆஜராகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.