
வவுனியா போக்குவரத்து சபையின் வவுனியா உதவி வீதி முகாமையாளர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிராக வவுனியா போக்குவரத்து சபையின் சாரதிகள் உட்பட உத்தியோகத்தர்கள் இன்று காலை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உதவி வீதி முகாமையாளர் எவ்வித காரணங்களுமின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தொழிலாளர்களின் முறைப்பாடுகளுக்கு அமையவே அவரை பதவியிலிருந்து நீக்கியதாக வீதி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், இடமாற்றம் தொடர்பில் நாம் அவ்வாறு எவ்வித முறைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை என்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் உதவி வீதி முகாமையாளர் ஏற்கனவே அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பணியாளர்கள், அவர் ஒவ்வொரு தொழிலாளரையும் பழி வாங்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, தற்போதிருக்கும் முகாமையாளரால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட உதவி வீதி முகாமையாளரின் இடமாற்றத்தை ரத்துசெய்து, தற்போது இருக்கும் முகாமையாளரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.