இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 200 பேர் மாத்திரமே தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் இது வரையான காலப்பகுதியில் நாட்டில் 3283 பேர் வரையிலானோரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 2500 ற்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த போது அடையாளம் காணப்பட்டவர்களாகும்.
இவ்வாறாக தொற்றுக்கு உள்ளானவர்களில் 13 பேர் இது வரையில் உயிரிழந்துள்ளதுடன் 3070 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதன்படி இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 200 பேர் வரையிலானோரே தற்போது வைத்தியசாலைகளில் தங்கியிருப்பதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.