
கொரோனா தொற்று கட்டுப்பாடு குறித்த உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சிறப்பு பிரதிநிதியாக இலங்கையின் வைத்தியர் பாலித அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் ஜெனரல் டெட்ரோஸ் கெப்ரேயஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, அவர் தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட உள்ளார்.
வைத்தியர் பாலித அபேகோன் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவராகவும் புகையிலை மற்றும் மதுபான பாவனை தொடர்பான தேசிய ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.