கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 12 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் மாவட்ட ஊடக அமைப்பின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் இந்த நினைவு தின நிகழ்வு இடம்பெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன், மாநகர முதல்வர் உள்ளிட பலரும் கலந்து கொண்டனர்.
சிரேஸ்ட ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க சண்டே லீடர் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக இருந்த போது இனந்தெரியாத குழுவினால் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
குற்றவாளி சமூகத்தில் எந்தவொரு நிலையில் இருந்தாலும் பின்வாங்காமல் தனது பத்திரிகையூடாக லசந்த விக்கிரமதுங்க தைரியமாக வெளிப்படுத்தினார்.
இவரின் ஊடக சேவையை கொளரவிக்கும் வகையில் ஊடக சுதந்திரத்திற்கான யுனெஸ்கோவின் குயிலமோ கேனோ விருது , மற்றும் NATIONAL PRESS CLUP, PRESS FREEDOM விருது ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.
அத்துடன் இவர் கொல்லப்பட்ட பின்னரும் International Press Institute World Press Freedom Heroes விருது வழங்கப்பட்டு சர்வதேசத்தினால் கௌரவிக்கப்பட்டார்.
இவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட போதிலும் இன்னும் இந்தக் கொலைக் குற்றத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.