July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இராணுவத்தின் தலைமையில் கொரோனா கட்டுப்பாட்டு குழு இருப்பது பொருத்தமில்லை”

நாட்டின் சுகாதார விடயங்களில் இராணுவத்தை நியமித்து, அவர்களே தீர்மானம் எடுக்கும் நிலைமை உருவாகியுள்ளதால் தான் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சுகாதாரத் துறையினர் இருக்கும் குழுவில் குறிப்பிட்ட சில இராணுவத்தினர் நியமிக்கப்பட்டால் அதில் ஒரு நியாயம் உள்ளது. ஆனால் இராணுவத்தின் தலைமையில் கொரோனா கட்டுப்பாட்டு குழு இருப்பது அடிப்படை தவறாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தீர்மானம் எடுக்கும் முடிவுகளை சுகாதார அதிகாரிகள் எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இராணுவ மயப்படுத்தலினால் அச்சமே நிலவுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று முஸ்லிம் மக்கள் ஜனாஸா விடயத்தில் மிகுந்த வேதனையுடன் உள்ளனர், அவ்வாறு இருக்கையில் சுகாதார அமைச்சர் பொறுப்பற்ற செயற்பாடுகளை கையாள்கின்றார் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளை தொடர்ந்துக்கொண்டிருக்காது உடனடியாக விஞ்ஞான ரீதியாக தீர்மானங்களை எடுக்குமாறு  பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.