
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர், ஷெஹான் ஜயசூரிய ஓய்வு பெறப் போவதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தாம் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் தமது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் தமது குடும்பத்துடன் குடியேறத் தீர்மானித்துள்ளதால் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாம் ஒரு தேசிய வீரராக பணியாற்றிய காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளுக்கு இலங்கை கிரிக்கெட் சபைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுவதாக ஷெஹான் ஜயசூரிய மேலும் கூறியுள்ளார்.
இவர் ஒருநாள் மற்றும் இருபது 20 சர்வதேச போட்டிகளில் இலங்கைக்காக விளையாடியுள்ளார்.
இதேவேளை, ஷெஹான் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆற்றிய சேவைகளுக்கு இலங்கை கிரிக்கட் சபை நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.