May 4, 2025 18:41:10

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களை 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை’

இலங்கையில் மாணவர்களுக்கான தனியார் வகுப்புகளை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுடன் அந்த வகுப்புகளைநடத்திச் செல்வதற்கான அனுமதியை வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை  நடைபெறவுள்ளவுள்ள நிலையிலேயே  25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புகளுக்கு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.