May 28, 2025 22:54:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று

Photo: Facebook/ Dayasri Jayasekara

இலங்கையின் பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி அவர் ஹிக்கடுவ பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.