July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சி -அமைச்சர் பந்துல!

இலங்கை சந்தையில் எந்தக் காரணத்திற்காகவும் அரசி விலையை அதிகரிப்பதற்கு இடமளிக்க போவதில்லை. என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஏதேனும் வகையில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுமாக இருந்தால், தேவையான அரிசியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, விலையை தொடர்ந்தும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

”அரசி ஆலைகளின் உரிமையாளர்கள் அரசி விலையில் அதிகரிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையில் நெல்லை பதுக்கி வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரியவருகின்றது.

ஆனால் அவ்வாறாக எந்த வகையிலும் விலை அதிகரிப்பை மேற்கொள்ள நாங்கள் தயாராக இல்லை. இவ்வாறாக நெல்லை பதுக்கி வைத்திருப்பவர்கள் யார் என்ற தகவல்களும் எங்களிடம் உள்ளன.

இவர்களால் அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுமாக இருந்தால் நாங்கள் அமைச்சரவையின் அனுமதியுடன் தேவையான அரிசியை இறக்குமதி செய்து தொடர்ந்தும் விலைக் கட்டுப்பாட்டை பேணுவோமே தவிர விலையை ஒருபோதும் அதிகரிக்க மாட்டோம்.” என்று அமைச்சர் கூறியுள்ளார்.