June 13, 2025 20:06:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை இராணுவத்தில் விவசாய படையணி அறிமுகம்

இலங்கை இராணுவத்தில் விவசாய படையணியொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் யோசனைக்கமைய இந்த படையணி உருவாக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய படையணியின் அறிமுக நிகழ்வு இராணுவத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.

நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவை பயன்படுத்தி விவசாயம் உற்பத்தியை உயர்த்தும் நோக்கிலும் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நோக்கிலுமே இந்த படையணி அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.