நுவரெலியா – இராகலை நகரில் அமைந்துள்ள வர்த்தக கட்டடத் தொகுதியொன்றில் ஏற்பட்ட தீயால் மூன்று கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராகலை நகரில் ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள கட்டிடத் தொகுதியிலேயே, இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினரும், இராகலை பொலிஸாரும், பிரதேச பொது மக்களும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
எவ்வாறாயினும் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக இராகலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.