May 29, 2025 14:27:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை’

(File photo: Facebook/ Jaffna International Airport)

இலங்கையின் யாழ்ப்பாணம் ‘பலாலி’ விமான நிலையத்தை புனரமைப்பது குறித்து புதிய உடன்படிக்கை ஒன்றினை செய்துகொள்ளவுள்ளதாகவும் அதற்காக இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்டுநாயக விமான நிலையத்தை புனரமைக்கவும், மத்தள விமான நிலையத்தை பிரதான விமான நிலையமாக மாற்றுவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதுடன், ரத்மலான, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த காலத்தில் அவசர அவசரமாக யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டாலும் கூட அதற்கான அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் அவர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அந்த விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பாக, புதிய உடன்படிக்கை ஒன்றினை செய்துகொள்வது குறித்து இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.