July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் 35 வருட குத்தகையில் இந்தியாவுக்கு’: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

file photo: Facebook/ Sri Lanka Ports Authority – Port of Colombo, Sri Lanka

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை 700 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தில் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 வருட குத்தகை அடிப்படையில் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தை ஒருபோதும் விற்கவோ, குத்தகைக்கு கொடுக்கவோ மாட்டோம் என பிரதமர் பாராளுமன்றத்தில் வாக்குறுதியளித்தாலும், கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பது தொடர்பில் இன்றும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடன்களைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் முதலீடுகளை மட்டுமே தாம் பெற்றுக்கொள்வதாகவும் கூறும் அரசாங்கம், சீனாவிடமிருந்து 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களையும், கொரியாவிடம் இருந்து 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார்.