
Photo: Facebook/ Pavithra Wanniarachchi
இலங்கையில் மலையக தோட்டப் பகுதியிலுள்ள வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த தோட்ட வைத்தியசாலைகளுக்கு முடியுமானவரை அதிகளவான மருத்துவர்களை நியமிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ், மலையக தோட்ட வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தோட்ட வைத்தியசாலைகள் குறித்து தாம் அதிக கவனம் செலுத்துவதாகவும், அந்த வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கையெடுப்பதாககவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தோட்ட வைத்தியசாலைகளுக்கு தமிழ் மொழி பேசக்கூடிய குடும்ப சுகாதார அதிகாரிகளை இணைத்துக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.