இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இலங்கைக்கான இந்திய தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகள் மற்றும் சமூக விடயங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராதா கிருஷ்ணன் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
Pleased to meet the TPA delegation. Appreciate their positive sentiments about our development programmes. This will remain an important facet of India's commitment. pic.twitter.com/IePV6iXZAv
— Dr. S. Jaishankar (Modi Ka Parivar) (@DrSJaishankar) January 7, 2021