இலங்கையின் 2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் வாக்காளராக பதிவு செய்து கொள்வதற்காக சிபாரிசு செய்துள்ள நபர்களின் பெயர்களை www.elections.gov.lk என்ற இணையத்திளத்தில் பரீட்சித்துக்கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி அந்த இடாப்பில் வாக்காளராக பதிவு செய்ய தகுதியுள்ள யாரெனும் ஒருவரின் பெயர் இல்லாவிட்டால், அந்த நபர் தனது பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவகருக்கோ அல்லது 0112860031 , 0112860032, 0112860034 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தோ இடாப்பில் பெயரை உள்ளடக்க முடியுமெனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடங்களிலும் வாக்காளர் இடாப்பு புதுப்பிக்கப்படுவதுடன், அந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்திற்குள் அது தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படும்.
ஆனால் நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையால் 2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை புதுப்பிக்கும் நடவடிக்கை தாமதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.