இலங்கையின் ஈடிஐ மற்றும் சுவர்ணமஹால் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் குழுவின் ஜீவிகா எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரினால் விடுக்கப்பட்டிருந்த உத்தரவுக்கமைய இவர்கள் மூவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.
குறித்த நிறுவனங்களின் மேலும் ஒரு பணிப்பாளரான நாலக எதிரிசிங்க இன்று முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்திருந்தார்.
இந்நிலையில் இன்று இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணைகளில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.