File Photo: Facebook/ Ministry of Youth and Sports
இலங்கையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கொவிட்-19 வழிகாட்டல்களுக்கமைய சகல விளையாட்டுகளுக்குமான பயிற்சி நடவடிக்கைகளையும் இந்த மாதத்திற்குள் ஆரம்பிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் சுகாதார அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் நிலைமையால் பல மாதங்களாக நாட்டில் சகல விதமான விளையாட்டு மற்றும் உடற் கட்டுமான பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக் கூடிய உடல் ரீதியிலான பிரச்சினைகளை கருத்திற்கொண்டு அவர்களுக்கு பயிற்சிகளுக்கு அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த மாத நடுப்பகுதியில் இருந்து அதற்கான அனுமதியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலைகளிலும் விளையாட்டுப் பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.