
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இன்று மாலை வீசிய சுழல் காற்றினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்லுண்டாய் ஜே-136 நவாலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் இன்று மாலை வீசிய சுழல் காற்றால் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களைத் தங்க வைப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தற்காலி கூடாரங்கள் வழங்கியுள்ளனர்.