இலங்கையில் 8 இலட்சம் பாடசாலை மாணவிகளுக்கு இந்த ஆண்டில் இலவச சுகாதார நாப்கின்களை (Sanitary Napkin) வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று கட்டங்களாக இதனை நடைமுறைப்படுத்த உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் கிராமப்புற பாடசாலைகளில் உள்ள மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அடுத்தக்கட்டமாக நடுத்தர மற்றும் நகர்ப்புற பாடசாலைகளுக்கு விரிவுபடுத்துவது தொடர்பில் ஆலோசிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு இறுதிக்குள் தேவைப்படும் அனைத்து பாடசாலை மாணவிகளுக்கும் இலவச சுகாதார நாப்கின்களை வழங்க நடிவடிக்கை எடுக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தல் வாக்குறுதியாக இத்திட்டத்தை முன்வைத்திருந்தார்.
எனினும், ஆளும் கட்சி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அதனை கேலிக்கைக்கு உட்படுத்தி விமர்சித்திருந்தனர்.
இருந்தபோதும், அரசாங்கத்தின் இத்திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராட்டியுள்ளதுடன் நாட்டின் அனைத்துப் பெண்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.