photo: Facebook/ Shanakiyan Rajaputhiran Rasamanickam
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய இருதயவியல் பிரிவு ஆய்வகத்திற்குத் தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்க பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவில் உள்ள குறைபாடுகளை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவுக்கான உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர், சுகாதார அமைச்சருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரு கிழமைகளில் கிடைக்க இருந்த வைத்திய உபகரணங்களை இடைநிறுத்தி, அவற்றை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து, உபகரணங்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் எந்தவொரு வைத்தியசாலையிலும் மேற்படி உபகரணங்கள் இல்லாமையினால், பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.