January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

File Photo

இலங்கையில் இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலாகும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கண்டி மாவட்டத்தின் பூஜாபிட்டி பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுனுகம திவனாவத்த ஆகிய பகுதிகளும்,  இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியாகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல்ல பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து இன்று அதிகாலை 5 மணிமுதல் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

இதற்கமைய, அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை 01, ஒலுவில் 02, அட்டாளைச்சேனை 08 ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரைப்பற்று 8/1, 8/3 மற்றும் அக்கரைப்பற்று 09 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும், அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கறைப்பற்று 05ஆம் மற்றும் 14ஆம் இலக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், நகர அதிகாரத்திற்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.