February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈடிஐ, சுவர்ணமஹால் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் மூவர் கைது

இலங்கையின் ஈடிஐ மற்றும் சுவர்ணமஹால் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் குழுவின் ஜீவிகா எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபரினால் விடுக்கப்பட்டிருந்த உத்தரவுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை அடிப்படையாக கொண்டே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.