July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தரம் ஒன்று மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரியில் ஆரம்பம்!

இந்த ஆண்டின் தரம் 1 மாணவர்கள் பெப்ரவரி மாத்தின் இரண்டாவது வாரத்தில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தரம் 02 முதல் தரம் 13 வரை கல்வி நடவடிக்கைகள் இம் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என அவர் தெரிவித்தார்.

அதேவேளை பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தரம் 1 மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்று நிறுபம் வெளியிடப்பட்டுள்ளதா கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இவ் சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.