
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு விடயத்தில் அவசரப்படாது, பொறுமையாக பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாடுகளை ஏற்படுத்திகொள்ள வேண்டும் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற தொழில் அமைச்சின் சில சட்டங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது தொழிலாளர்களுக்கும், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் பாதிப்பில்லாதவாறே நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கூட்டு ஒப்பந்தமென்ற ஒன்று இருப்பதால் அதனை தாண்டி சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது என்பது இலகுவானது அல்லவெனவும், இதனால் பேச்சுவார்த்தைகளை நடத்தி முதலாளிமார் சம்மேளம், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.