அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பு கல்லடியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது மதகுரு சிவஸ்ரீ.கி.சிவபாலன் குருக்கள், சிவில் சமூக ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, ஈகைச்சுடர் ஏற்றினர்.
இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸினால் குமார் பொன்னம்பலத்தின் ஞாபகார்த்த உரையும், அதிதிகள் உரையும் நடைபெற்றது.
இதேவேளை வவுனியாவிலும் குமார் பொன்னம்பலத்தின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு ஆதிவிநாயகர் ஆலய மண்டபத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா முக்கியஸ்தர் சி.கஜேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர் மயூரசர்மா, நகரசபை உறுப்பினர் ஜாணுயன், பிரதேசசபை உறுப்பினர் சஞ்சுதன்இஅந்தணர் ஒன்றியத்தின் பிரபாகரக்குருக்கள், சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.