February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்ததில் வீடொன்று சேதம் – கினிகத்தேனையில் சம்பவம்

இலங்கை, நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேனை – பிட்டவல, கீ கியனாகெதர கிராமத்தில் பாரிய கல் ஒன்று வீடொன்றின் மீது சரிந்து விழுந்ததில் வீட்டிலிருந்த பெண்ணொருவர் காயமடைந்துள்ளதுடன் வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததினால் இரண்டு அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த சில பொருட்களும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

இச் சம்பவத்தின் போது, ஆறு பேர் வீட்டில் இருந்துள்ளனர்.

இதில் காயமடைந்த பெண் சிகிச்சைக்காக கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்த ஏனையவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை கிராம சேவகர் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.