இலங்கையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்த 3,772 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 11 ஆம் திகதி பாடசாலை கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாவதற்கு முன்னர், அவர்களுக்கான நியமன கடிதங்கள் விநியோகிக்கப்படுமென கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பீ.கே.எஸ். சுபோதிகா தெரிவித்துள்ளார்..
அவர்களில் 1000 பேர் தேசிய பாடசாலைகளிலும் ஏனையவர்கள் மாகாண பாடசாலைகளிலும் நியமிக்கப்படவுள்ளனர்.
இதன்மூலம் நாட்டின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யமுடியுமாக இருக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.