January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியிலும் திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்த நீதிமன்றத்தினால் தடை உத்தரவு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ, திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக் கூடாது என கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவேந்தல் வாரம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், இது தொடர்பான நிகழ்வுகள் கிளிநொச்சியில் நடத்தப்படுவதனை தடுக்கும் வகையில் கிளிநொச்சி பொலிசார் நீதிமன்றத்தின் ஊடாக இன்றைய தினம் அதற்கான தடை உத்தரவை பெற்றுள்ளனர்.

இதன்படி இன்று முற்பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகதிற்கு சென்ற பொலிஸார் அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் நீதிமன்ற உத்தரவு தொடர்பான அறிவித்தலை கையளித்துள்ளனர்.

இந்த அறிவித்தலின் பிரகாரம் 15.09.2020 தொடக்கம் 28.09.2020 வரையான காலப்பகுதியில் அஞ்சலி நிகழ்வுகள் , ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் எதனையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.