November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை 2020 ஆம் ஆண்டில் 650 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயங்களை அச்சிட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கி 2020 ஆம் ஆண்டில் 650 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயங்களை அச்சிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் வருடமொன்றில் அச்சிடப்பட்ட ஆகக் கூடிய தொகையாக இது காணப்படுகின்றது.

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதிச் சவால்களை நிர்வகிப்பதற்காகவே இவ்வாறானதொரு தொகை நாணயங்கள் அச்சிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய, 2020 ஆம் ஆண்டு ஆரம்பமாகும் போது அரச பிணையங்களின் தொகை 74.7 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டுள்ளதோடு, 2020 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியில் அது 725.19 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் மத்திய வங்கி 4 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயங்களையே அச்சிட்டிருந்தது.

அத்தோடு, 2021 ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் 13.2 பில்லியன் பெறுமதியான நாணயங்கள் அச்சிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.