February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கருணா அம்மானை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைப்பது சாத்தியப்படாத விடயமே”

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என முன்னாள் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய விநாயகமூர்த்தி முரளிதரன், தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் அது தொடர்பாக சிவஞானம் கருத்து வெளியிட்டார்.

”கருணா கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்தாரே தவிர கூட்டமைப்பு அவரை இணைத்துக் கொள்ளுவதற்கான எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை. அவரை கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயமே” என தெரிவித்துள்ளார்.