இலங்கையில் எதிர்வரும் தேர்தல்களில் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியுடன், ஐக்கிய தேசிய கட்சி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘பொய்களைத் தோற்கடித்து, ஒன்றிணைந்து பணியாற்றுவோம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைத்துக்கொள்ளும் முயற்சிகள் குறித்து, ‘பொய்களைத் தோற்கடித்து, ஒன்றிணைந்து பணியாற்றுவோம்’ என்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதன்போது, நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு எதிர்கால தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து செயற்படுவதன் சாத்தியங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.