20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனையில் குறைபாடுகள் இருப்பதாக அரசாங்க தரப்பில் சிலர் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதிய திருத்தம் பற்றி ஆராய்வதற்காகஅமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் உதய கம்மன்பில , அலி சப்ரி , நிமல் சிறிபால டி சில்வா , விமல் வீரவன்ச , சுசில் பிரேமஜயந்த , வியாழேந்திரன் , டிலான் பெரேரா , பிரேமநாத் சி தொலவத்த ஆகியோரை உள்ளடக்கிய விசேட குழுவொன்று சில தினங்களுக்கு முன்னர் பிரதமரால் நியமிக்கப்பட்டது.
அந்த குழுவினர் இன்றைய தினத்தில் பிரதமரிடம் தமது ஆய்வு அறிக்கையை கையளித்துள்ளனர்.