May 3, 2025 19:04:27

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிவாஜிலிங்கம் கைது!

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத் தடை உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்ட அவர், கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.