file photo
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நாகை மாவட்டம்- புஸ்பவனம் கடற்பரப்பில் நேற்று மாலை குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட மாகாணத்தின் ஊர்காவற்றுறை, குருநகர் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் பயணித்த படகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, படகு திசைமாறி இந்தியாவின் புஸ்பவனம் கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.