February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 2020 ஆம் ஆண்டில் 30,601 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

இலங்கையில் கடந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30, 601 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எனினும், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் மிகவும் குறைந்தளவானவர்களே டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2019 ஆம் ஆண்டில்  150,049 பேரே பாதிக்கப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் டெங்கு பரவும் அபாயம் தொடர்ந்தும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கு நுளம்பின் தாக்கம் காலை 6 மணியிலிருந்து 8 மணிவரையும், மாலை 4 மணியிலிருந்து 7 மணிவரையும் அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, மக்கள் சுற்றுப்புறச் சூழலை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.