கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கையில் அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான நிதியை உலக வங்கியிடம் இருந்து கடனாக பெறவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்த கடன் உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையில் 40 இலட்சம் பேருக்கு கொவிட் -19 வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
எனினும் தற்போது உலகில் பல்வேறு தடுப்பூசிகள் குறித்து பேசப்படுகின்ற நிலையில் உலக நாடுகளுக்கு இடையில் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் போட்டித்தன்மை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்தே இலங்கை அரசாங்கம் உலகவங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான கடன்களை தருமாறு கோரியதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.