January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஊவாதென்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

சட்ட விரோத துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்களை வைத்திருந்த குற்றத்தில் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த கொழும்பு – மாளிகாவத்தை போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு, ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை அவர் திரும்பப் பெறவேண்டும் என்ற நிபந்தனைக்கு கீழ் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2010 ஜனாதிபதித் தேர்தலின் போது டி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும் மற்றும் துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட வெடிபொருட்களையும் வைத்திருந்த குற்றத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் மீதான குற்றங்கள் நிறுபிக்கப்பட்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் கடந்த ஜுன் முதலாம் திகதி இவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது ஊவாதென்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி, பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.