January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலில்

File Photo

இலங்கையில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கமான தொடர்புகளை பேணியவர்கள் மற்றும் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்களே இவ்வாறாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை காத்தான்குடி, அவிசாவளை, ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுகளும் மற்றும் கொழும்பில் ஆறு பொலிஸ் பிரிவுகளும் உள்ளடங்கலாக ஒன்பது பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அனுமதியின்றி வெளியார் செல்வதற்கோ, அங்கிருப்பவர்கள் வெளியில் வருவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரை தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை மீறிய 2,044 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.