File Photo: Twitter/ Srilanka red cross
கொழும்பு மாவட்டத்திற்கு வெளியிலும் கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு மாநகர எல்லைக்குள் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது தற்போது குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ள போதிலும், மற்றைய பிரதேசங்களில் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறிப்பாக களுத்துறை, பேருவளை, மொனராகலை மற்றும் காத்தான்குடி ஆகிய பகுதிகளில் கொரோனா துணைக் கொத்தணிகள் உருவாவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சுகாதார பிரிவின் ஆலோசனைகளை சரியான முறையில் கடைபிடித்து, புதிய கொத்தணி உருவாகுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.