கொவிட் -19 வைரஸுக்கு எதிராக வழங்கப்படவுள்ள தடுப்பூசியை இலங்கையில் ரூ.1400 இலிருந்து 8000 ரூபாய்க்குள் பெற்றுக்கொள்ள முடியும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் அமெரிக்காவின் பைசர்-பயோன்டெக் தடுப்பூசியை 20 அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் பெற்றுக் கொள்ளமுடியும் எனவும், இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியை அமெரிக்க தடுப்பூசியை விடவும் சற்றுக்குறைவான பெறுமதியில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அதேபோல் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கீழ் கொவிட் -19 வைரஸ் தடுப்பு செயற்பாட்டில் இணக்கம் தெரிவித்துள்ள நாடுகளின் தரப்படுத்தல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இலங்கைக்கும் அனுமதி கிடைத்துள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய்க்கான தடுப்பூசிகளை இந்த ஆண்டின் முற்பகுதியில் பெற்றுக்கொள்ளமுடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ள போதிலும் ஒருவருக்கு இரண்டு தடுப்பூசிகளை பயன்படுத்தவேண்டும்.
மேலும் இரண்டு தடுப்பூசிகளும் தற்காலிக வைரஸ் தடுப்பூசிகளாக மாத்திரமே இருக்கும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.