
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
சமீப காலமாக ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான அபாயகரமான வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில், டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்றுவரை இதுபோன்ற விபத்துக்களில் 65 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹான தெரிவித்தார்.
இந்த விபத்துக்களில் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 6 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1,824 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார்.