
இலங்கையில் சிங்களவர்களைத் தவிர ஏனைய இனத்தவர்களை சமமாகக் கருத முடியவில்லையென்றால், இந்த நாட்டை இனவாத நாடாகவே அடையாளப்படுத்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மாகாண சபைகள் முறைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பௌத்த பிக்குகள் மாகாண சபை முறைமைக்கு எதிராகக் கொண்டுள்ள நிலைப்பாடும் எனது நிலைப்பாடும் முற்றிலும் வேறுபட்டவை.மாகாண சபை முறைமைக்கு அப்பால், அதிகாரப் பரவலாக்கலை கொண்ட வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையுள்ளது. அந்த வகையில் மாகாண சபைக்கு அப்பால் செல்ல வேண்டுமேயன்றி, மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே நானும் இதற்கு எனது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.