January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பதிவு செய்யப்படாத கைத்தொற்று நீக்கி விற்பனைக்கு தடை!

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத கைத்தொற்று நீக்கி திரவங்களை (சானிடைசர்)  விற்பனை செய்வதை தடை செய்து விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, பதிவு செய்யப்படாத கைத்தொற்று நீக்கிகளை இறக்குமதி செய்தல், மொத்தமாக சேமித்து வைத்திருத்தல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த தடை எதிர்வரும் பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலைமை ஏற்பட்டதை தொடர்ந்து, தொற்று நீக்கி திரவங்களின் விற்பனைகள் அதிகரித்திருந்ததுடன், அதன் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலைமையில் தரமற்ற தொற்று நீக்கி திரவங்களும் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்தே அதனை கட்டுப்படுத்தும் வகையில் கட்டாயம் அதனை பதிவு செய்ய வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.