
நல்லூரில் நாளை (15) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நல்லூரில் அமைந்துள்ள திலிபனின் நினைவு தூபியில் நாளைய தினத்தில் நினைவேந்தல் நிகழ்வை நடதத ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்த நிகழ்வுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி அந்த நிகழ்வை நடத்த நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.